என் பிறந்தநாளுக்கு நேரில்வந்து பார்க்க வரவேண்டாம்: தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

சசிகலா
சசிகலா

என் பிறந்தநாளுக்கு தொண்டர்கள் சிரமப்பட்டு என் இல்லத்திற்கு வருவதைத் தவிருங்கள்.உங்கள் பகுதியில் இருக்கும் ஏழை, எளியவர்களுக்கு இயன்ற உதவியை அந்நாளில் செய்யுங்கள் என சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

சசிகலா தொண்டர்களுக்கு இன்று விடுத்துள்ள அறிக்கையில், “என் பிறந்தநாளுக்கு சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்துகொண்டேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை. உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, உற்சாகம் தருகிறது.

அதேநேரத்தில் நான் விரைவில் உங்களை வந்து சந்திக்க தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன். ஆகையால் இப்போது எனது பிறந்தநாளுக்காக நீங்கள் சிரமப்பட்டு பயணித்து எனது இல்லம் வருவதைத் தவிர்த்துவிட்டு தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன் இருக்கும் ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே நீங்கள் எனக்கு செய்கின்ற சிறந்த பிறந்தநாள் பரிசாக மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதுவே மறைந்த ஜெயலலிதா எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாகவும் எண்ணுகிறேன். தொண்டர்களே பொறுமையோடு இருங்கள். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்முன்னே நமக்காக காத்துக்கொண்டு இருக்கிறது ”எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in