விமர்சனங்கள் குறித்து இம்மி அளவுகூடக் கவலைப்படுவதில்லை: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்விமர்சனங்கள் குறித்து இம்மி அளவுகூடக் கவலைப்படுவதில்லை: முதல்வர் ஸ்டாலின்

விமர்சனங்கள் குறித்து இம்மி அளவு கூடக் கவலைப்படுவதில்லை, நல்லவைகளை எடுத்துக்கொள்வேன், கெட்டவைகளைப் புறம் தள்ளுவேன் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் இணைந்து மரியாதை செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்‘’ விமர்சனங்கள் குறித்து இம்மி அளவு கூடக் கவலைப்படுவதில்லை, நல்லவைகளை மட்டுமே எடுத்துக் கொள்வேன், கெட்டவைகளைப் புறம் தள்ளுவேன்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கூறியிருந்தேன் இந்த ஆட்சி என்பது ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாதவர்களுக்குமானது தான். ஓட்டுப் போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்; ஓட்டுப் போடாதவர்கள் இந்த ஆட்சிக்கு ஓட்டு போடாமல் விட்டுவிட்டோமே என வருத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இந்த ஆட்சி நடக்க வேண்டுமென கூறியிருந்தேன். அந்த அடிப்படையில் தான் இந்த ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

இரண்டு ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு கொடுத்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in