அம்பேத்கரின் அரசியல் சாசனம் வேண்டுமா? ஷரியத் சட்டம் வேண்டுமா? - அமித்ஷா கேள்வி!

உள்துறை அமைச்சர் அமித்ஷா
உள்துறை அமைச்சர் அமித்ஷா

இந்த நாடு அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தால் நடத்தப்பட வேண்டுமா? அல்லது ஷரியத் சட்டம் மூலம் நடத்தப்படவேண்டுமா? என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, “காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையால் பாஜகவுக்குத்தான் அதிக பலன் கிடைத்துள்ளது. அந்தத் தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு ஏராளமான மக்கள் பாஜகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். பாஜகவில் இணைந்தும் வருகின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது, மற்றவர்களை மகிழ்விக்கவும், சமாதானப்படுத்தும் வகையிலும் இருக்கிறது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை பொய்யான அறிக்கையுடன் பொதுமக்களிடம் வந்துள்ளனர்.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். நாடு முழுவதும் ஷரியா முஸ்லிம் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

பிரதமர் மோடி தடை செய்த முத்தலாக் சட்டமான ஷரியா சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸார் கூறுகின்றனர். இந்த நாடு அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தால் நடத்தப்பட வேண்டுமா? அல்லது ஷரியத் சட்டம் மூலம் நடத்தப்படவேண்டுமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்?. தற்போது முஸ்லிம் பெண்களை பாதிக்கும் முத்தலாக் சட்டத்தை நீக்கிவிட்டோம். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் நாம் இருக்கிறோம். ஆனாலும் காங்கிரஸார் நாட்டைப் பிரிக்கும் தனிப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவோம் என்று கூறி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in