பகீர்: வருமான வரித்துறை குறி வைத்துள்ள மீனா ஜெயக்குமார் யார் தெரியுமா?

மீனா ஜெயக்குமார்
மீனா ஜெயக்குமார்

கவுன்சிலராக போட்டியிடக் கூட தனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என பொதுமேடையில் பேசி திமுக தலைவர் ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாகி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் மீனா ஜெயக்குமார். அவரைத்தான் இப்போது வருமான வரித்துறை குறி வைத்து அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது.

மீனா ஜெயக்குமார்
மீனா ஜெயக்குமார்

மீனா ஜெயக்குமார் `ஆலம் விழுதுகள்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்திவருகிறார். இவர் கணவர் ஜெயக்குமார், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர். சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாவுக்கு திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் பதவி கிடைத்தது. அதன் பிறகு அவர் கனிமொழியுடனும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், தெற்குத் தொகுதி கூட்டணிக்குச் சென்றுவிட்டதால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு மேயராகி விடலாம் என கனவுடன் இருந்தார்.

முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பியுடன் மீனா ஜெயக்குமார்
முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பியுடன் மீனா ஜெயக்குமார்

ஆனால், மீனா ஜெயக்குமாரின் கனவு பலிக்காமல் போனது. அதற்கு அந்த மாவட்டத்தின் பொறுப்பாளரான கார்த்திக் தான் காரணம் என தொடர்ந்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய வந்த அவர், தேர்தலுக்குப் பிறகு நடந்த செயற்குழுக் கூட்டத்தில், மீனா ஜெயக்குமார் கார்த்தி மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், மீனாவை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது திமுக தலைமை.

பின்னர் அவருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. மீனா ஜெயக்குமாரை பொறுத்தவரை கட்சியை கடந்து கோவையில் முக்கிய பெண் தொழிலதிபராகவும் திகழ்கிறார். செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவராக வலம் வந்த மீனா ஜெயக்குமார் சட்டப்பேரவை தேர்தலுக்காக தொகுதி முழுவதும் ஆயத்த பணிகளைச் செய்து வருகிறார்.

முதலமைச்சருடன் மீனா ஜெயக்குமார்
முதலமைச்சருடன் மீனா ஜெயக்குமார்

லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோசும், மீனா ஜெயக்குமாரும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்ட்டேட் தொழில் செய்து வரும் மீனா ஜெயக்குமாரை அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமி என திமுகவில் உள்ள சிலரே கூறிய நிலையில் தான் இந்தச் சோதனையானது நடைபெற்று வருகிறது. கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் மீனா ஜெயக்குமார் இல்லம் அமைந்துள்ளது.

அமைச்சர் எ.வ.வேலுவுடன் மீனா ஜெயக்குமார்
அமைச்சர் எ.வ.வேலுவுடன் மீனா ஜெயக்குமார்

இதேபோல் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் எம்.எஸ்.சாமி இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.எஸ்.சாமியை பொறுத்த வரை மீனா ஜெயக்குமாரின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர். இதனால் தான் அவரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in