ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அணியினர் தேர்வு செய்த 3 சின்னங்கள் எவை தெரியுமா?

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அணியினர் தேர்வு செய்த 3 சின்னங்கள் எவை தெரியுமா?

ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே அணியினர் தங்கள் தரப்பில் தலா 3 சின்னங்களை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி இன்று 'உதய சூரியன்', 'திரிசூலம்' மற்றும் 'கதாயுதம்' ஆகிய மூன்று சின்னங்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் கட்சிச் சின்னத்திற்கான தேர்வுகளாக சமர்ப்பித்துள்ளது.

முன்னதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியினர் திரிசூலம், எரியும் டார்ச் மற்றும் உதய சூரியன் ஆகிய மூன்று சின்னங்களில் ஒன்றை இறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டது. இந்த சூழலில்தான் உத்தவ் தாக்கரே இன்று சிவசேனா சின்னத்தையும் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கிய உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

சனிக்கிழமை அன்று, நவம்பர் 3 ம் தேதி அந்தேரி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் பெயரையும் அதன் தேர்தல் சின்னத்தையும் பயன்படுத்துவதற்கு சிவசேனா பிரிவுகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மேலும், திங்கட்கிழமைக்குள் மூன்று வெவ்வேறு பெயர் தேர்வுகள் மற்றும் அந்தந்த குழுக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான சின்னங்களை பரிந்துரைக்குமாறும் இரு குழுக்களையும் ஆணையம் கேட்டுக் கொண்டது.

சின்னங்கள் ஒரே மாதிரியாக உள்ளதா அல்லது வேறு எந்த கட்சியினரும் பயன்படுத்தவில்லையா என்பதை தேர்தல் ஆணையக் குழு ஆய்வு செய்யும். அதன்பின்னர் இரு அணிகளுக்கும் சின்னம் வழங்கப்படும். அந்தேரி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 14 ம் தேதி கடைசி நாளாக இருப்பதால், இரு அணிகளின் மாற்று சின்னங்கள் மற்றும் பெயர்கள் குறித்த தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in