ஹெச்.ராஜாவை ஆளுநராக்கினால் என்ன நடக்கும் தெரியுமா?:துரை வைகோ சொன்ன ரகசியம்!

ஹெச்.ராஜாவை ஆளுநராக்கினால் என்ன நடக்கும் தெரியுமா?:துரை வைகோ சொன்ன ரகசியம்!

ஹெச்.ராஜ் போன்றவர்களை ஆளுநராக்கினால், அவர்களால் தேர்வு செய்யப்படும் துணைவேந்தர்கள் பாஜகவினராக தான் இருப்பார்கள் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.

திருவள்ளுர் மாவட்டம் ஆவடியில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பணிச்செயலாளர் ஆவடி அந்தரிதாஸ் தலைமை வகித்தார். இதில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்துகொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமித்துக் கொள்ளலாம் என்கிற சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ள தமிழக அரசின் செயல் வரவேற்கத்தக்கது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளே பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்கின்றன. அதேபோல் தமிழகத்திலும் துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்கும் என்பது வரவேற்புக்குரியது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " ஹெச்.ராஜா போன்றவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் அவர்களைப் போன்றவர்களால் துணைவேந்தரை நியமிக்கும் போது அவர்களும் பாஜகவை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். எனவே, தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in