சென்னை வந்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசாக அளித்த புத்தகம் என்ன தெரியுமா?

பிரதமரை வரவேற்ற முதலமைச்சர்
பிரதமரை வரவேற்ற முதலமைச்சர்சென்னை வந்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசாக அளித்த புத்தகம் என்ன தெரியுமா?

சென்னைக்கு வருகைத் தந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று ‘’தமிழ்நாட்டில் காந்தி’’ என்ற புத்தகத்தின் ஆங்கில பிரதியை வழங்கியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடி மதிப்பீட்டில் புதிய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களைப் பார்வையிட்டார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியை வரவேற்றார் அப்போது பரிசாக எழுத்தாளர் அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' என்ற புத்தகத்தின் ‘’Gandhi's Travels in Tamilnadu'' ஆங்கில பிரதியை வழங்கினார்.

அந்த புத்தகத்தில் எழுத்தாளர் அ.ராமசாமி, ‘’1896 முதல் 1946-ம் ஆண்டு வரை இருபது முறை தமிழ்நாட்டில் காந்தியின் காலடிபட்டுள்ளது. அவர் ‘மகாத்மா’ எனக் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் அவரை மகானாகத் தரிசித்தார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமும் வாழ்த்து மடல்கள் குவிந்தன.

கதருக்காக, தீண்டாமைக்கு எதிராக என எதற்கு நிதி கேட்டாலும் மறுக்காமல் அள்ளிக் கொடுத்தார்கள் தமிழ் மக்கள். அரசியல் மொழி என எந்தவிதத்திலும் மக்களை அவர் வேற்றுமைப்படுத்திப் பார்த்ததில்லை’’ குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த புத்தகத்தைப் பிரதமர் மோடிக்கு அளித்துள்ளதாக பாஜகவினர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in