`ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் திமுகவின் எண்ணம் பலிக்காது'- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி`ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் திமுகவின் எண்ணம் பலிக்காது'- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

``ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் எண்ணம் பலிக்காது'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக., மாணவரணி சார்பில் சிவகாசி அருகே நாராயணபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், ``மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் உரிமை, தகுதி அதிமுகவுக்கு மட்டுமே உண்டு. தியாகிகளை என்றுமே மதிக்காத திமுகவிற்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்துவதற்கு எந்த தகுதியுமில்லை. ஆசியாவில் பெரும் பணக்காரரான முதல்வர் ஸ்டாலின் தமிழக ஏழை மக்களை முற்றிலும் மறந்துவிட்டார். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மக்கள் நல்வாழ்வு திட்டங்களை முடக்குவதே திமுக அரசின் வேலை.

அதிமுக ஆட்சியில் ஏழை, எளியோருக்கென செயல்படுத்திய திட்டங்களை நிறுத்தியது ஏன் என திமுகவினரிடம் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கேள்வி எழுப்ப தயாராக உள்ளனர். இத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பர். பணத்தை அள்ளி வீசி மக்கள் மனநிலையை மாற்றி விடலாம் என்ற திமுகவினர் எண்ணம் நிறைவேறாது'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in