இதைச்சொல்ல உங்களுக்கு `தில்' இருக்கா?- இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு சவால் விடும் திமுக எம்எல்ஏ

பழநி எம்எல்ஏ செந்தில்குமார்
பழநி எம்எல்ஏ செந்தில்குமார்இதைச்சொல்ல உங்களுக்கு `தில்' இருக்கா?- இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு சவால் விடும் திமுக எம்எல்ஏ

``திமுக அரசின் சாதனைகள் இளங்கோவனை வெற்றி பெறச்செய்யும்'' என பழநி எம்எல்ஏ செந்தில்குமார் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பழநி எம்எல்ஏ செந்தில்குமார் பேசுகையில், ``அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 15 விளையாட்டுகளை ஒருங்கிணைத்து முதல்வர் கோப்பை திட்டத்தை தொடங்கியுள்ளார். வாரிசு அரசியல் என சொல்லிக்கொண்டே இருங்கள். அந்த வாரிசு எப்படி நிர்வாகம் செய்கிறார் என்பதையும் பாருங்கள். திராவிட இயக்க வாரிசு தான் உதயநிதி. ஸ்டாலினுக்கு பிறகு தலைவராக கூட வருவார்.

திமுக தலைமையில் தான் கூட்டணி என சொல்ல திமுகவினருக்கு தைரியம் உள்ளது. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என சொல்ல இபிஎஸ்ஸுக்கோ, ஓபிஎஸ்ஸுக்கோ தில் இருக்கா? ஒரு வேட்பாளரை கூட தேர்வு செய்ய உங்களால் முடியவில்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்வார். ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சியின் சாதனைகள் இளங்கோவனை வெற்றி பெற வைக்கும். திமுக தான் உண்மையான திராவிட இயக்கம்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in