இளம் பெண்ணைச் சீரழித்த திமுக இளைஞரணியினர்!

கைதானவர்களின் புகைப்படத்துடன் கூடிய திமுக போஸ்டர்.
கைதானவர்களின் புகைப்படத்துடன் கூடிய திமுக போஸ்டர்.

விருதுநகரில் இளம் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து, ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினர் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 4 பேர் பள்ளி மாணவர்கள்.

விருதுநகர் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது தன்னுடன் வேலை பார்த்த மேலரத வீதியைச் சேர்ந்த ஹரிஹரனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. காதலிப்பதாக கூறி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக பழகிய ஹரிஹரன், இருவரும் சேர்ந்து நெருக்கமாக இருப்பதை வீடியோவாக பதிவுசெய்துள்ளார். பிறகு அதனை தனது நண்பர்களுடனும் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களும் இந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். இப்படியே ஒரு வருடத்துக்கும் மேல் தொடர்ந்த நிலையில், பள்ளி மாணவர்களும் அந்தப் பெண்ணை மிரட்டி சீரழித்துள்ளனர்.

இதற்கு மேலும் சகிக்க முடியாது என்று அந்தப் பெண் விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸில் புகார் செய்தார். அந்தப் புகாரில், ‘நானும், விருதுநகர் மேலதெருவை சேர்ந்த ஹரிகரனும் காதலித்து வந்தோம். ஒருநாள் பெத்தனாட்சி நகரில் உள்ள மருந்து குடோனுக்கு என்னை அழைத்துச் சென்ற ஹரிகரன், அங்கு ஆசைவார்த்தை கூறி என்னுடன் உறவு வைத்துக்கொண்டார். அப்போது ஹரிகரன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். கொஞ்ச நாட்கள் கழித்தே அந்த வீடியோ குறித்த விவரம் எனக்குத் தெரியவந்தது. நான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும், இல்லாவிட்டால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டினார். அதன் பிறகே, ஹரிகரன் என்னை உண்மையாகக் காதலிக்கவில்லை என்று தெரியவந்தது.

கைதான இளைஞரணி நிர்வாகிகள் ஜுனைத், ஹரிகரன்.
கைதான இளைஞரணி நிர்வாகிகள் ஜுனைத், ஹரிகரன்.

என்னைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த அவர், அந்த வீடியோவை அவரது நண்பர்களான மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜீனத் அகமது ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். அதனைக் காட்டி அவர்களும் என்னை மிரட்டி, சீரழித்தார்கள். இதில் மாடசாமி என்பவர் எனது வீட்டிற்கே வந்து என் தாயாரிடம் அந்த வீடியோவை காட்டி மிரட்டினார். இப்போது அவர்களது தொல்லை இன்னும் அதிகமாகிவிட்டது. எனவே, ஹரிகரன், மாரி, மாடசாமி, கோபி, அகிலன், பிரவீன், பரணி, ஜூனைத் அகமது ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், அவரைச் சீரழித்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தப் பிரச்சினையை காவல்துறையினர் சீரியஸாக அனுகினர். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து 8 பேரையும் கைது செய்தனர். இதில், ஹரிஹரன், ஜூனைத் ஆகியோர் திமுக இளைஞரணி நிர்வாகிகள் என்பது் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in