நில அபகரிப்பு வழக்கில் கைதான திமுக பெண் கவுன்சிலர் நீக்கம் இல்லை: கணவர் கட்சியிலிருந்து நீக்கம்

நில அபகரிப்பு வழக்கில் கைதான திமுக பெண் கவுன்சிலர் நீக்கம் இல்லை: கணவர் கட்சியிலிருந்து நீக்கம்

சென்னையில் தொழிலதிபரை கடத்தி நிலத்தை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன்.

சென்னை மெரினாவில் தொழிலதிபரைக் கடத்தி நில அபகரித்த வழக்கில் திமுக பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைத்துவிட்டதாக கூறி, அதற்கான ஆவணங்களை சமர்பிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு நேற்று வந்தனர். அப்போது முன்ஜாமீன் வழங்கிய ஆர்டரை மாஜிஸ்திரேட் சரிபார்த்த போது, முன்ஜாமீன் வழங்கியதாக சமர்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் போலி ஆவணங்களை சமர்பித்த திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை எழும்பூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சென்னையில் தொழிலதிபரை கடத்தி நிலத்தை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பெண் கவுன்சிலரின் கணவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `சென்னை தென்மேற்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்கு பகுதி 124-வது வட்டக் கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்' என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தொழிலதிபரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக பெண் கவுன்சிலர் விமலா மீது திமுக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in