'பாஜகவின் மிரட்டலுக்கு திமுக என்றுமே பணியாது': அமைச்சர் சேகர்பாபு காட்டம்!

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு'பாஜகவின் மிரட்டலுக்கு திமுக என்றுமே பணியாது': அமைச்சர் சேகர்பாபு காட்டம்!

பாஜகவின் மிரட்டல் உருட்டலுக்கு என்றுமே திமுக பணியாது. அமலாக்கத்துறை சோதனை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து செயல்படுத்தும் அம்மன் திருக்கோயில்களுக்கு ஆடி மாத சுற்றுலா திட்டத்தை சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘’ சட்டமன்ற அறிவிப்பு 29 படி, ஆன்மிக சுற்றுலா தற்போது நடத்தப்பட்டுள்ளது. காளிகாம்பாள் திருக்கோயிலிலிருந்து 10 அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். நடப்பாண்டில் இன்று 47 பக்தர்கள் இந்த சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் பல கோயில்களைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு சிறப்பான ஏற்பாடு.

ஒரு நபருக்கு 1500ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, சுற்றுலா செல்லும் அனைத்து கோயில்களிலும் பிரசாதங்களும், மதியத்திற்கு இலவச அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நப்ர் ஒன்றுக்கு 800 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் என இரண்டு கட்டங்களாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆளவந்தார் அறக்கட்டளை இடம் எந்த தனியாருக்கு தரப்படவில்லை என்பதை உறுதியாக சொல்கிறேன். ஆளவந்தார் நோக்கத்துக்கு எதிர்மறையாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் ஆக்கிரமிப்பில் இருந்த 5 ஏக்கர் ஆளவந்தான் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி ஆளவந்தார் நோக்கங்களை நிறைவேற்றவே பாடுபட்டு வருகிறது. திமுக ஆட்சி இறைசொத்து இறைவனுக்கே என்பதை நம்பும் அரசு.

எந்த நோக்கத்துக்காக திருக்கோயில்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டதோ, அதே நோக்கத்திற்காக அவை பயன்படுத்தப்படவேண்டும் என்பதே இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10 கோயில்களும், தனியாரின் 30 கோயில்களும் சமுதாய பிரச்சினைகளால் மூடப்பட்டுள்ளன. நீண்ட காலமாக பிரச்சினையில் இருந்து வந்த பல கோயில்கள் திறக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அர்சகர் பயிற்சி பள்ளியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிற சமுதாய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என தெரிவித்த அவர்," 30 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றிய சாமி சகஜாநந்தாவின் பெயரை வியாவர் பாடியில் உள்ள சாலைக்கு சூட்டுவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஏற்கனவே ஆளுநர் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன் அமலாக்கத்துறையும் இணைந்துள்ளது. அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வார். இது போன்ற மிரட்டல்களுக்கு திமுக என்றுமே பணியாது முன்பை விட வேகமாக செயல்படுவோம். எங்களை காப்பாற்ற முதல்வர் உள்ளார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in