திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

அமைச்சர் துரைமுருகன்.
அமைச்சர் துரைமுருகன்.திமுக ஒருபோதும் வெறுப்பு அரசியலில் ஈடுபடாது: அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

திமுக ஒருபோதும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடாது. விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும் என்று தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

திருச்சி விமானநிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுகவின் திட்டமல்ல. அது மத்திய அரசு திட்டம். அத்திட்டத்தினை விரைந்து முடிக்க மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை. மத்திய அரசு மற்றும் உலக வங்கி மூலம் நிதி பெற்றால் மட்டுமே இத்திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த முடியும். எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளுங்கட்சியாக மாறும் போது ஏற்கெனவே இருந்த கட்சி தொடக்கிய திட்டங்களை முடக்கக் கூடாது. அது ஜனநாயகம் அல்ல. அதனால் தான் அதிமுக தொடக்கிய திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தாமல் செயல்படுத்துகிறது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக தொடக்கிய திட்டங்களை முடக்கி விடும்.

ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதில் யாரையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. யார் இதை செய்கிறார்களோ, அவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். திமுக ஒருபோதும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடாது. விருப்பு அரசியலில் மட்டுமே ஈடுபடும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in