செங்கோட்டையனின் பேச்சை மேசையை தட்டி வரவேற்ற திமுக: என்ன காரணம்?

செங்கோட்டையனின் பேச்சை மேசையை தட்டி வரவேற்ற திமுக: என்ன காரணம்?

சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய பேச்சை கேட்டு திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழும் கல்வித் தொலைக்காட்சியை கொண்டு வந்த பெருமை அதிமுகவை சேரும் என்றார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது அதிமுகவின் நிலைபாடாக இருந்தாலும், அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தை திராவிட இயக்கங்கள் தவிர்த்து வேறு யாராலும் ஆள முடியாது என்று செங்கோட்டையன் கூறினார். அப்போது, செங்கோட்டையனின் கருத்தை ஆதரித்து திமுக உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.

மேலும் அவர் பேசுகையில், தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in