அண்ணா அறிவாலயத்தின் முன்பு திமுகவினர் திடீர் போராட்டம்: என்ன காரணம் தெரியுமா?

அண்ணா அறிவாலயத்தின் முன்பு திமுகவினர் திடீர் போராட்டம்: என்ன காரணம் தெரியுமா?

தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் செல்லதுரைக்கு ஆதரவாக சென்னை அறிவாலயத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் செல்லதுரை அதே பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு பதிலாக கட்சி மேலிடம் தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமாரை அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த செல்லதுரையின் ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி வடக்கு மாவட்டத்துக்கு தேர்தல் நடத்தி செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அவர்களுடன் திமுக தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திமுகவில் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டச் செயலாளர், மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடத்தப்படும் முதல் மாவட்டச் செயலாளர் தேர்தல் என்பதால் இதில் கடும் போட்டி நிலவி வருகிறது. திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் வேட்புமனுக்களை பெற்று வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in