திமுக பேச்சாளர்கள் தீவிரவாதிபோல பேசுகிறார்கள்: முதல்வர் நடவடிக்கை எடுக்கக்கோரும் ஜி.கே.வாசன்

ஜி.கே. வாசன்
ஜி.கே. வாசன்

சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக தலைமை கழக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் மற்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உள்ளிட்டோரை தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் பற்றி பேசி இருக்கும் தரக்குறைவான பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சு அநாகரிகத்தின் உச்சக்கட்டமாகும். அவரது பேச்சில் தீவிரவாதத்திற்கும், கொலை மிரட்டலுக்கும் இடம் இருப்பதால் சட்டம் ஒழுங்குக்கே பாதகம். அவரின் பேச்சு தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அனைவரின் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.

தமிழக முதலமைச்சர் உடனடியாக இது போன்ற மிகவும் மோசமான செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்காமல் திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில் திமுகவினருக்கு அறிவுறுத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in