
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான் உயிரிழந்தார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராகவும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவராகவும் இருந்து வந்தவர் டாக்டர் மஸ்தான். இந்த நிலையில், இன்று காலை ஊரப்பாக்கத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மஸ்தான் உயிரிழந்தார். 1995-2001 வரை அ.தி.மு.க. மாநிலங்களவையில் பதவி வகித்தார்.
மஸ்தான் மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவுச் செயலாளருமான டாக்டர்.மஸ்தான் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.