மாணவிக்கு பாலியல் தொல்லை; திமுக செயலாளர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; திமுக செயலாளர் கைது

மதுரை மாவட்டம், பெருங்குடி அருகே உள்ள வலையங்குளத்தைச் சேர்ந்தவர் வீரணன்(36). திமுக கிளை செயலாளரான இவர், அப்பகுதியில் பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவி ஒருவரின் படிப்புக்கு உதவி செய்வதாக கூறி அடிக்கடி சந்தித்திருக்கிறார். உரிமையாகத் தொட்டுப் பேசியவர், பிறகு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். அவரது தந்தை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வீரணனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.