திமுக முதல், 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மாவட்ட வாரியாக அறிவித்தார் துரைமுருகன்
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்hindu கோப்பு படம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இதை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மமக, கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி இடம்பெற்றுள்ளன. “கூட்டணிக் கட்சிகளுக்கு மாவட்டங்களில் இடங்களை மாவட்டச் செயலாளர்களே ஒதுக்க வேண்டும். அவர்களது வெற்றியையும் மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்துவிட்டு திமுக வேட்பாளர்களின் பட்டியல்களை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டது. மாவட்டச் செயலாளர்கள் திமுக வேட்பாளர்களின் பட்டியல்களையும் சென்னைக்கு அனுப்பிவிட்டனர். அதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்றிரவு வெளியிட்டார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கோப்பு படம்

தூத்துக்குடி, கும்பகோணம், காஞ்சிபுரம் மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், கோவில்பட்டி, திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம், விக்கிரவாண்டி, வளவனூர், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், ஆடுதுறை, திருபுவனம், வேம்பத்தூர், திருநாகேஸ்வரம், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம், அய்யம்பேட்டை, மெலட்டூர், இடைக்கழிநாடு, அம்மாபேட்டை, கழுகுமலை, புதூர், கடம்பூர், எட்டயபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், கருங்குழி, அச்சரப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, திமுக போட்டியிடும் வார்டுகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை துரைமுருகன் வெளியிட்டார். அதில், வேலூர், தஞ்சை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரக்கோணம், ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம், சோளிங்கர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, அம்பாசமுத்திரம், களக்காடு, விக்கிரமசிங்கபுரம் ஆகிய நகராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், கலவை, விளாப்பாக்கம், திமிரி, அம்மூர், திருவலம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், மூலக்கரைப்பட்டி, நான்குநேரி, ஏர்வாடி, மணிமுத்தாறு, பணகுடி, வடக்கு வள்ளியூர், திசையன்விளை, திருகுறுங்குடி, கோபாலசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பத்தமடை, மேலச்செவல், நாரணம்மாள்புரம், சங்கர் நகர், பெருங்குளம், சாய்புரம், ஏரல், சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், தென்திருப்பேரை, நாசரேத், உடன்குடி ஆகிய பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in