திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு!
முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிடுபவர்களின் பெயர்களை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவுக்கு 4 இடங்களில் எளிதாக வெற்றிபெறும் வாய்ப்பு உள்ள நிலையில், ஒரு இடத்தை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு விட்டுக்கொடுத்துள்ளது திமுக.

மாநிலங்களவையில் திமுக எம்.பி-க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அதிமுகவைச் சேர்ந்த விஜயகுமார், நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடக்கிறது. திமுக இதில் 4 இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்தும், ஒரு இடத்தைக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களில் போட்டியிடுபவர்களின் பெயரை திமுக தலைவம் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, திமுக சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிட தஞ்சை கல்யாண சுந்தரம், கிரி ராஜன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுகவைப் பொறுத்தமட்டில் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பதில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.