இந்தி திணிப்புக்கு எதிரான திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு: காரணம் இதுதான்!

இந்தி திணிப்புக்கு எதிரான திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்திவைப்பு: காரணம் இதுதான்!

இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் விளக்க பொதுக் கூட்டங்களைக் தள்ளிவைக்க வேண்டும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அலுவல் மொழி தொடர்பாக நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை எதிர்த்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வந்த நிலையில், தமிழகச் சட்டப்பேரவையில் அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் நவ.4-ம் தேதி தமிழகம் முழுவதும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பெரம்பலூரிலும், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் காஞ்சிபுரத்திலும், பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தாம்பரத்திலும், இளைஞரணி செயலாளர்  உதயநிதி தலைமையில் ஆவடியிலும், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் வேலூரிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து வருவதால் பொதுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை பெய்யும் இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைமையிலிருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் மழையில்லாத நாட்களில் பொதுக் கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in