முதல்வர் ஸ்டாலினின் பேனரைக் கிழித்த திமுகவினர்: தென்காசியில் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினின் பேனரைக் கிழித்த திமுகவினர்
முதல்வர் ஸ்டாலினின் பேனரைக் கிழித்த திமுகவினர்தென்காசியில் பரபரப்பு

தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்து பேனரை திமுகவினரே கிழித்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலியிலிருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. தென்காசியை அமைப்பு ரீதியாக வடக்கு, தெற்கு என இரு பிரிவுகளாக திமுக பிரித்தது. தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செல்லத்துரை மாற்றப்பட்டதில் இருந்து அம்மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மாவட்ட பஞ்சாயத்து தலைவியான தமிழ் செல்வி என்பவருக்கு, பாவூர் சத்திரம் பேரூராட்சி திமுக செயலாளராக உள்ள ஜெகதீஷ் என்பவர் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகக் கூறி, அவரது கணவர் வசைபாடிய ஆடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கியது.

தென்காசி திமுக
தென்காசி திமுக

நேற்று முன்தினம் கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ள ஜெயக்குமார் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், அதனால் தற்கொலை செய்யப்போவதாகவும் முதல்வருக்கு கடிதம் எழுதி பரபரப்பை கிளப்பினார்.

தற்போது தென்காசி நகரிலும் கோஷ்டிப்பூசல் வெடித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் நகரப்பகுதிகளில் பேனர்களை வைத்துள்ளார். இது பிடிக்காத மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் பல இடையூறுகளை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்து பேனரை திமுக நிர்வாகி ஒருவர் கிழித்தெறியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது.

நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா
நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையாதென்காசி திமுக

அதுபோல தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே பேனர் வைக்க முயன்றவர்களை, நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா என்பவர் தடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in