மேளதாளம், சிலம்பாட்டம்... கோவை வந்த அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

அமைச்சர் உதயநிதிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
அமைச்சர் உதயநிதிக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் வருகை தந்த தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் பாரம்பரிய விளையாட்டு கலைகளுடன் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிலம்பம் சுற்றி அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பு
சிலம்பம் சுற்றி அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பு

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரவி இல்லத்திருமண வரவேற்பு விழா தொண்டாமுத்தூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க திமுகவின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தார். அவரை, விமான நிலையத்தில், தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

பாரம்பரிய விளையாட்டுக்களுடன் அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பு
பாரம்பரிய விளையாட்டுக்களுடன் அமைச்சர் உதயநிதிக்கு வரவேற்பு

தொடர்ந்து விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க, இளைஞரணியினர் உற்சாக வரவேற்பும், கோயில் அறங்காவலர்கள் குழு சார்பில் 100க்கும் மேற்பட்ட கும்ப மரியாதையும், மகளிர் அணி சார்பில் பெண்கள் நடனம் ஆடியும், வீர விளையாட்டான கம்புகள் சுற்றியும், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உதயநிதிக்கு கைகொடுக்க முண்டியடித்த திமுக மகளிர் அணியினர்
உதயநிதிக்கு கைகொடுக்க முண்டியடித்த திமுக மகளிர் அணியினர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in