கேரளாவில் கட்சி அலுவலகத்தை திறந்தது திமுக: பாஜகவினர் 50 பேர் இணைந்தனர்

கேரளாவில் கட்சி அலுவலகத்தை திறந்தது திமுக: பாஜகவினர் 50 பேர் இணைந்தனர்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரை சட்டமன்ற தொகுதியில் திமுக அலுவலகத்தை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் கொல்லம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரிஜுராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் போது ஏழை குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சோலார் விளக்கு வழங்கப்பட்டது.

பின்னர் ஊர்வலமாக கொட்டாரக்கரை நகராட்சி அலுவலகம் வரை சென்றனர். கேரள மாநிலம் புனலூரைத் தொடர்ந்து கொட்டாரகரையிலும் திமுக அலுவலகம் திறக்கப்பட்டது. தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் திராவிட மாடல் கொள்கை வலுவாக ஒலிக்க தொடங்கி இருக்கிறது. பாஜகவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in