சர்ச்சை...பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக நிர்வாகிக்கு மீண்டும் பொறுப்பு!

பட்டியலின இளைஞரை மிரட்டும் சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம்
பட்டியலின இளைஞரை மிரட்டும் சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம்
Updated on
1 min read

சேலத்தில் பட்டியலின இளைஞர் ஒருவரை ஊர் மக்கள் முன்னிலையில் ஆபாசமாக திட்டி, தாக்க முற்பட்ட திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தின் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திமுக தலைமை ரத்து செய்து, மீண்டும் அதே பொறுப்பை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சேலத்தை அடுத்த சிவதாபுரம் அருகே திருமலைகிரி கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கும்பாபிஷேகம் முடிவுற்று, மண்டல பூஜை நடந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர், அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இதனை அறிந்த, அந்த ஊராட்சியின் தலைவரும், திமுக சேலம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மாணிக்கம், கோயிலுக்குள் புகுந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் அவரது தந்தையை கிராம மக்கள் முன்னிலையில் நிற்க வைத்து, கோயிலுக்குள் புகுந்து ஏன் சண்டையிட்டாய் என்று கேட்டு, ஆபாசமான வார்த்தைகளால் திட்டும் வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

இந்த நிலையில், தன் மீதான தவறுக்கு மாணிக்கம் வருத்தம் தெரிவித்தால் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவதாகவும் அவர் வகித்து வந்த சேலம் தெற்கு ஒன்றிய செயலாளராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in