`தமிழக ஆளுநரை திரும்பப் பெறு, வாபஸ் வாங்கு'- மக்களவையில் திமுக எம்பிக்கள் முழக்கம்

`தமிழக ஆளுநரை திரும்பப் பெறு, வாபஸ் வாங்கு'- மக்களவையில் திமுக எம்பிக்கள் முழக்கம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்காததை கண்டித்து மக்களவையில் இருந்து வெளியேறிய திமுகவினர், ஆளுநரை திரும்பப் பெறு என தமிழில் முழக்கமிட்டனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை திமுக எம்.பி.டி.ஆர். பாலு தாக்கல் செய்தார். ஆனால், திமுக அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த மக்களவை சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனை கண்டித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், அவைக்கு வந்த திமுக எம்பிக்கள், மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டியதோடு, தமிழக ஆளுநரை திரும்பப் பெறு, தமிழக ஆளுநரை வாபஸ் வாங்கு என தமிழிலேயே முழக்கமிட்டனர். இதேபோல், மாநிலங்களவையிலும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா, எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக பேச அனுமதி கேட்டு திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவை தலைவர் அனுமதி தராததால் உறுப்பினர்கள் தொடர் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in