`ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’: குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பும் திமுக எம்பி-க்கள்

`ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’: குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பும் திமுக எம்பி-க்கள்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசிற்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருவதால், அவரை திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்ப இருக்கிறார்கள்.

பிஹார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாகக் கொண்டவர் ஆர்.என். ரவி. இவர் பிஹார் மாநிலத்தில் பிறந்திருந்தாலும் 1976-ம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானவர். கேரளாவைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் அவர் காவல்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்றி இருக்கிறார். மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும், உளவுப் பிரிவு அமைப்பான ஐபி-யிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 2012-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு பிரதமர் அலுவலக உளவுப் பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வந்த நிலையில், தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.

திமுக தலைமையிலான தமிழக அரசிற்கும், ஆளுநருக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே பொருந்திப் போகவில்லை. திமுக கூட்டணிக் கட்சியினரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நீட் விவகாரம், இந்தி திணிப்பு, தேசியக் கல்விக் கொள்கை எனப் பல்வேறு விஷயங்களில் இருதரப்பினரும் முரணாகவே இருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியைத் திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுத  இருக்கிறார்.   மேலும் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய எம்பிக்கள் அண்ணா அறிவாலயம் வந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப இருக்கும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in