பூஜை பொருட்களை எட்டி உதைத்த திமுக எம்.பி: கண்டன முழக்கமிட்ட திமுகவினர்!

பூஜை பொருட்களை எட்டி உதைத்த திமுக எம்.பி: கண்டன  முழக்கமிட்ட திமுகவினர்!

இந்து மதச் சடங்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். பூமி பூஜை பொருட்களைக் காலால் எட்டி உதைத்ததால் சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், அதியமான் கோட்டையில் புதிய நூலகம் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நூலகம் அமைப்பதற்காகப் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக எம்பி செந்தில்குமார் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது பூமி பூஜைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்குப் பூஜைக்காக வைத்திருந்த கற்களைக் காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த திமுகவினர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இனிமேல் இதுபோன்ற விழாவுக்கு செந்தில்குமார் வரக்கூடாது என அங்குக் கூடியிருந்த திமுகவினர் கண்டன முழக்கம் எழுப்பினர்.  திமுக கொடியை அவர் காரில் கட்டாதது குறித்தும் செந்தில்குமாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டார். செந்தில்குமாரின் செயலுக்கு திமுகவினரே போர்க்கொடி தூக்கியுள்ளது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in