`திராவிட மாடல் ஆட்சிக்கு உலகத்துக்கே முதல்வர் ஸ்டாலின்தான் உதாரணம்'- எல்.முருகனுக்கு கனிமொழி பதிலடி!

`திராவிட மாடல் ஆட்சிக்கு உலகத்துக்கே முதல்வர் ஸ்டாலின்தான் உதாரணம்'- எல்.முருகனுக்கு கனிமொழி பதிலடி!

ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார் என்று கூறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ``முதல்வர் ஸ்டாலின் இன்றைக்கு அவருடைய அமைச்சர்களை, அவருடைய கட்சியின் மாவட்ட செயலாளர்களை, அவர்களுடைய எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார். அவர்களை கட்டுப்படுத்த முடியாத ஒரு ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார்" என்று விமர்சித்திருந்தார்.

இவரது இந்த பேச்சுக்கு திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், "தமிழக முதல்வர் எப்படி செயல்படுகிறார் என்று சொல்லக்கூடியவர்கள் தகுதியும் அருகதையும் உடையவர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கிற அரசியல்வாதிகள் ஒரு அரசாங்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை பார்க்கக்கூடிய ஆர்வம் கொண்ட அத்தனை பேரும் தமிழக முதல்வர் இன்று முன்வைக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை ஒரு உதாரணமாக எடுத்து கூறும் அளவுக்கு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு பயமாக இருப்பதால் அப்படி சொல்லி இருக்கலாம்" என்று சாடினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in