ஆளுநருக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் பேச தடை: முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் உத்தரவு

ஆளுநருக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் பேச தடை: முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் உத்தரவு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக போஸ்டர் ஒட்டவோ, பேனர் வைக்கவோ திமுகவினருக்கு தடை விதிக்கப்படுவதாகவும், சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக பேசக்கூடாது என்றும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்,' நாளை முதல் ஜன.13-ம் தேதி வரை நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலளிக்க வேண்டும். மேலும் மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை சட்டப்பேரவையில் எவ்வாறு பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும்' என்று ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

மேலும்' தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் நேரடியாக சென்று விளக்க வேண்டும். தொகுதி மக்கள் என்ன தேவை என்று நினைக்கிறார்கள் என்பதை அறிந்து அவற்றை உடனடியாக தீர்வு காண சட்டப்பேரவை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அவர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

அத்துடன், 'சட்டப்பேரவையில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியை தாக்கிப் பேசக்கூடாது என்றும், ஆளுநருக்கு எதிராக பேனர்கள், போஸ்டர்கள் அச்சடிக்கேவோ, ஒட்டவோ கூடாது' என்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in