இன்று திமுக எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் கூட்டம்: முக்கிய ஆலோசனை!

ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாளை நடைபெறவுள்ள இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. எனவே இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in