40 சதவீதம் கமிஷன் கேட்கும் திமுக எம்எல்ஏ: அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

40 சதவீதம் கமிஷன் கேட்கும் திமுக எம்எல்ஏ: அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் திமுக எம்எல்ஏ ஒருவர் 40 சதவீதம் கமிஷன் கேட்கும் வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், திமுக எம்எல்ஏ ஒருவர், 40 சதவீதம் கமிஷன் கேட்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து டெண்டர் விடப்பட்டுள்ளது. 5 ஒன்றியங்களில் இந்த டெண்டர் நிறைவடைந்தது. இந்நிலையில் மாதனூர் ஒன்றியத்தில் மிட்டாளம், வெங்கடசமுத்திரம், தேவலாபுரம், வடபுதுப்பட்டு, மாதனூர் உள்ளிட்ட 9 ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் தொடர்பாக டெண்டர் வைப்பதில் கடந்த சில நாட்களாக பிரச்சினை நீடித்து வந்துள்ளது.

இந்நிலையில் ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ஒன்றிய குழு பெருந்தலைவர் சுரேஷ்குமார் மற்றும் துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கமிஷன் சதவீதம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களிடம், 40 சதவீதம் உங்களுக்கு 60 சதவீதம் எங்களுக்கு என கறாராகப் பேசி வாக்குவாதம் செய்துள்ளார் எம்எல்ஏ. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை.

அதில், திமுக பள்ளி எம்எல்ஏ 40 சதவீதம் கமிஷன் கேட்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. என்றும் வீடியோவில் `பெரியவர்' என்னும் வார்த்தை வருகிறது என்றும் அந்தப் பெரியவர் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in