‘தமிழ்நாட்டுக்கும் வேண்டும் தனிக்கொடி’: கருணாநிதி அதிரடி!

முதல்வருடன் கருணாநிதி எம்எல்ஏ
முதல்வருடன் கருணாநிதி எம்எல்ஏ

‘தமிழ்நாடு’ என்ற பிரயேகத்தை முன்வைத்து கிளம்பிய சர்ச்சைகளே இன்னும் ஓயவில்லை. அதற்குள் தமிழ்நாட்டுக்கு என தனியாக கொடி வேண்டும் என்று வெடி கொளுத்திப் போட்டிருக்கிறார் திமுக எம்எல்ஏவான கருணாநிதி.

தமிழகம் - தமிழ்நாடு ஆகிய பிரயேகங்களை ஒரே பொருளில் தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் ’தமிழ்நாடு’ என்பதை பின்தள்ளி ’தமிழகம்’ என்பதை முன்வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அதற்கு ஆதரவளித்தவர்களின் நோக்கம் பொதுவெளியில் கொந்தளிப்பை உருவாக்கியது. இதன் விளைவாக தமிழகம் என்பதை ஒதுக்கிவைத்து, முழுமனதாக தமிழ்நாடு என்பதையே பலரும் பயன்படுத்த ஆரம்பித்தனர். பொங்கல் பண்டிகையின் மத்தியிலும் ’தமிழ்நாடு’ மற்றும் ’தமிழ்நாடு வாழ்க’ முழக்கமே சமூக ஊடகங்களில் எதிரொலித்தது.

அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி வேண்டும் என்ற விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இது தொடர்பாக தி.நகர் சட்டமன்றத் தொகுதியின் திமுக எம்எல்ஏவான ஜெ.கருணாநிதி வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடக மாநிலத்தைப் போல தமிழ்நாட்டுக்கும் தனிக்கொடி வேண்டும். கர்நாடகாவிற்குத் தனி மாநில கொடி இருக்கும்போது, தமிழ்நாட்டிற்கென ஏன் கூடாது தனிக்கொடி? 1970ல் தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த தனிக்கொடி கோரிக்கையை மீண்டும் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி தேவை. அது நம் உரிமை” என தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் கோரிக்கையை வலியுறுத்தியும், விமர்சித்தும் விவாதங்கள் களைகட்டி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in