கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்த திமுகவினர்; வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததால் பரபரப்பு

கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்த திமுகவினர்; வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததால் பரபரப்பு

சென்னை பெசன்ட்நகர் பகுதியில் 179-வது வார்டில் திமுகவினர் கத்தியுடன் புகுந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததால், அங்கு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

சென்னை, ஓடைக்குப்பம் பகுதியில் 179-வது வார்டில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசனும், திமுக சார்பில் கயல்விழி போட்டியிடுகின்றனர்.

காலை முதல் 179-வது வார்டில் சுமுகமாக வாக்குப்பதிவு நடந்துவந்த நிலையில், மதியத்துக்குமேல் திடீரென திமுகவினர் சிலர் கத்தியுடன் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, வாக்கு இயந்திரத்தை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அதிகமான வாக்குகள் அதிமுகவுக்கு விழுந்திருப்பதால், தோல்வி பயத்தில் திமுகவைச் சேர்ந்த திருவான்மியூர் கதிர் அடியாட்களுடன் வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த வாக்கு இயந்திரத்தை மாற்றி, புதிதாக இயந்திரம் கொண்டு வந்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.