கவுன்சிலராக இருப்பதா, வேண்டாமா?... திமுக உறுப்பினர்கள் கேள்வியால் மதுரை மேயர் டென்ஷன்!

மதுரை மாநகராட்சி கூட்டம்
மதுரை மாநகராட்சி கூட்டம்

மாநகரில் எங்கு பார்த்தாலும் பாதாளச்சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. கவுன்சிலராக இருக்கிறதா, வேண்டாமா என்ற முடிவெடுக்க வேண்டிய நிலைதான் தற்போது உள்ளது என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, கவுன்சிலர்கள் கொந்தளித்தனர்.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடந்தது. இதில் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் பேசும்போதே எழுந்த சில திமுக கவுன்சிலர்கள், ‘‘கவுன்சிலர்களாக இருக்கிறதா, வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியதிருக்கிறது. எங்கள் வார்டுகளில் இதுவரை தெருவில் ஓடிய  சாக்கடை  வீட்டுக்குள் வரத்தொடங்கிவிட்டது.  அதிகாரிகளுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை. மாநகராட்சியில் பேசினாலும் அதற்குப் பதில் வழங்குவதில்லை ’’ என்று ஆவேச குரலில் கூறினர். 

அவர்களைத் தொடரந்து பேசிய அதிமுக கவுன்சிலர்கள் சண்முகவள்ளி,  ரூபன் குமார் ஆகியோரும் இக்கருத்தையே வலியுறுத்தி பேசினர்.

மேயர் இந்திராணி
மேயர் இந்திராணி

இதனால் கோபமடைந்த மேயர் இந்திராணி, அதிமுக உறுப்பினர்களைப் பார்த்து ‘‘உங்கள் அதிமுக ஆட்சி 10 ஆண்டு நடந்தது. அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ’’ என்றார்.

அதிமுக மாநகராட்சி எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்களும், திமுக கவுன்சிலர்கள் சிலரும் தொடர்ந்து மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in