`அதிமுகவைக் குறைந்த விலைக்கு குத்தகை எடுத்துள்ளார் ஈபிஎஸ்’: விளாசும் நாஞ்சில் சம்பத்!

`அதிமுகவைக் குறைந்த விலைக்கு குத்தகை எடுத்துள்ளார் ஈபிஎஸ்’: விளாசும் நாஞ்சில் சம்பத்!

திருவள்ளூர் மாவட்டம், பெரிய பாளையம் பகுதியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நேற்று மாலை நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்குத் திராவிடம் குறித்து வகுப்பு எடுத்தனர்.

நிகழ்ச்சி முடிந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, “பாஜக ஆட்சி வந்தவுடன் அரசியல் சட்டத்தின் மாண்புகள் மங்கி வருகின்றன. குடியரசுத் தலைவர்தான் அரசியல் சட்டத்தின் பாதுகாவலர். அரசியல் சட்டத்தின் மாண்பைக் காப்பற்ற ஒருவர் வரவேண்டும் என்பதற்காகவே குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மோடியின் சொல்லும் செயலும் வெவ்வேறு மாதிரியாக உள்ளது. நாடாளுமன்றத்தில் இருப்பார். ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் தீர்ப்பு அளிப்பார்கள்” என்றார்.

நாஞ்சில் சம்பத் கூறுகையில், “டெல்லி எஜமானர்கள் அனுமதியோடு அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி குறைந்த விலைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். பாஜக மாநிலக் கட்சிகளை வாழ விட்டதாக வரலாறு இல்லை. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பலியாகியுள்ளார். பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கொம்பு சீவி, அதிமுகவை உடைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. அழிந்து வரும் அதிமுகவை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவராலும் காப்பாற்ற முடியாது. இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம். எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் பாஜகவை வரவிட மாட்டோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in