மாறி மாறி அவதூறு பிரச்சாரம்; தற்போது வெடித்தது மோதல்: திமுக- மதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

மாறி மாறி அவதூறு பிரச்சாரம்; தற்போது வெடித்தது மோதல்: திமுக- மதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் திமுக- மதிமுக நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். இதில் இருகட்சிகளின் ஒன்றிய செயலாளர்கள் உள்பட 11 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ளது திருக்குறுங்குடி பேரூராட்சி, களக்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட இந்த பேரூராட்சியில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக- மதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இங்குள்ள 7-வது வார்டில் திமுகவை எதிர்த்து களம் இறங்கிய மதிமுக வெற்றியும் பெற்றது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றியது. அப்போதிருந்தே இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவர் மாறி ஒருவர் அவதூறு பிரச்சாரமும் செய்து வந்தனர்.

இந்நிலையில் திருக்குறுங்குடி மேலரதவீதி சந்திப்பில் திமுக- மதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் முன்னிலையில் தகராறில் ஏற்பட்டனர். இதில் திமுக ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. திருக்குறுங்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக திருக்குறுங்குடி போலீஸார் களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ கருணாநிதி, மதிமுக ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு உள்பட 11 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in