திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேர் விடுதலை!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேர் விடுதலை!

2011-ல் நடந்த ஆறுமுகநேரி முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் மீதான கொலை முயற்சி வழக்கில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட 5 பேரை விடுதலை செய்து தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். கடந்த 2001 முதல் அந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவர் தற்போது மீனவர், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2011-ல் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி முன்னாள் நகர திமுக செயலாளராக இருந்த சுரேஷ் என்பவர் மீது கொலை முயற்சி சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனிதா ராதாகிருஷ்ணனின் தூண்டுதலில் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுரேஷ் மீதான கொலை முயற்சி வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் பெயரும் சேர்க்கப்பட்டது.

அதாவது ஆறுமுகநேரி காவல்துறையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in