நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் திமுக: களத்தில் இறங்கியது ஐடி விங்!

டி.ஆர்.பி ராஜா
டி.ஆர்.பி ராஜா

இந்தியா முழுவதும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சில மாநிலக் கட்சிகள் தேசிய கட்சிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி தெலங்கானா மாநில முதல்வர் தனது தெலங்கானா ராஷ்டி சமிதி கட்சியை பாரத் ராஷ்டிரிய சமிதி எனப் பெயரை மாற்றினார். டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்தைக் குறிவைத்து வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதுபோல் தேசிய நீரோடையில் கால்வைக்க திமுக முடிவெடுத்துள்ளது. அதன் முதல் கட்டமாக நாடு முழுவதும் திமுகவின் ஐடி விங், அந்தந்த மாநில மொழிகளில் செயல்பட உள்ளது.

இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா  வெளியிட்டுள்ள அறிவிப்பில், " முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசின் சாதனைகளை இந்திய அளவில் எடுத்துச்செல்வதற்கும், திராவிட இயக்கத்தின் சமூக நீதி மத நல்லிணக்கக் கொள்கைகள் நாடு முழுவதும் பரவிட வேண்டிய தேவையினைக் கருத்தில் கொண்டும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கழகத்தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாட்டினை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. திமுக அமைப்புகள் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணிக்கான ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்களைப் பரிந்துரைக்க வேண்டுகிறேன். தலைமைக் கழகத்தின் ஒப்புதல் பெற்று, அந்தந்த மாநில கழகத் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள். முதற்கட்டமாக, புதுச்சேரி மாநில கழகத் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் பணி நிறைவு பெற்றுள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in