கள்ளச்சாராயம் குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் பேசாமல் இருப்பது ஏன்?- ஆதங்கப்படும் ஈபிஎஸ்

சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ஈபிஎஸ் ஆறுதல்!
சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ஈபிஎஸ் ஆறுதல்!கள்ளச்சாராயம் குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் பேசாமல் இருப்பது ஏன்?- ஆதங்கப்படும் ஈபிஎஸ்

கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் விற்பனையில் திமுகவினர் ஈடுபடுவதாக தமிழக எதிர்க்கட்சித்தலைவர் ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘’கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் துயரமான, அதிர்ச்சியான சம்பவம். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களை விற்பனை செய்வதாக செய்திகள் வருகின்றன. அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க குழு அமைக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை பெருகியுள்ளது.

கள்ளச்சாராயம் விற்பனைக் குறித்து அரசுக்கு ஏற்கெனவே தெரிந்துள்ளது. தெரிந்து அதனைத் தடுக்க அரசு தவறியுள்ளது. இது மட்டுமில்லாமல் சமூகப் போராளிகள் என்று இந்த ஆட்சியில் பல பேர் கூறிக்கொண்டு இருந்தார்கள். சாராயத்தை தடுப்பதை பற்றி அவர்கள் பாட்டெல்லாம் பாடினார்கள். அவர்கள் இப்போது எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. சமூக போராளிகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா என தெரியவில்லை. எல்லோருமே திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இவ்வளவு உயிர்கள் பறிபோய் இருக்கிறது. எந்த சமூகப் போராளியும், நடிகரும் குரல் கொடுக்கவில்லை. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளும் வாய்த் திறக்காமல் மௌனம் காக்கிறார்கள்.

இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. இவ்வளவு உயிர்கள் போயிருக்கிறது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சினையை எடுத்து சொல்வது தான் எதிர்க்கட்சியின் கடமை. இதைக் கூட செய்ய முடியாத கட்சிகள் எல்லாம் இன்று தமிழகத்தில் இருக்கிறது. யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் சமம். எங்களை பொறுத்தவரை நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாக சொல்லவில்லை. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் போதை விளிம்பில் இருக்கிறார்கள்.

2011-16 ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக, பணம் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கை விசாரிக்க, விசாரணை குழுவை அமைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in