கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு திமுக அரசுதான் காரணம்: குற்றம் சாட்டும் மருத்துவர் கிருஷ்ணசாமி!

மருத்துவர் கிருஷ்ணசாமி
மருத்துவர் கிருஷ்ணசாமி படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தது எங்கள் கட்சி தான். ஆட்சியர் அலுவலகம் முன்பு எங்கள் கட்சி சார்பில் போராட்டத்தை முன்னெடுத்தோம். இதில் 17 பேர் உயிர் இழந்தனர். இதை நினைவுகூறும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 23-ம் தேதி ஆற்றில் அஞ்சலி செலுத்துவோம். மாலையில் பொதுக்கூட்டம் நடத்துவோம்.

ஆனால், இந்த ஆண்டு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை. இதைப்பற்றிக் கேட்டால் அனுமதி கேட்ட இடம், சாதி ரீதியாக பிரச்சினை உள்ள இடம் எனச் சொல்லி மறுத்துவிட்டனர். மோதல்கள் ஏற்படாமல் தடுப்பதே காவல்துறையின் பணி. போலீஸ்காரர்கள் அதைச் செய்யாமல் திட்டமிட்டே எங்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறார்கள். மக்களிடம் திராவிடம் என பேசிப்பேசியே அவர்களை சாதி, மதம் ரீதியாகப் பிரித்துவிட்டனர். கள்ளக்குறிச்சி கலவரத்தைப் பொறுத்தவரை அரசு மீது நம்பிக்கை இழந்த பின்புதான் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்திற்கு அதனால் திமுக அரசுதான் பொறுப்பு. திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இது மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் ”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in