திமுக அரசு ஓராண்டு நிறைவு: இந்திய அளவில் டிரெண்ட்டான #1YearOfCMStalin ஹேஷ்டேக்

திமுக அரசு ஓராண்டு நிறைவு: இந்திய அளவில் டிரெண்ட்டான #1YearOfCMStalin ஹேஷ்டேக்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனால், #1YearOfCMStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். உடனே தேர்தல் வாக்குறுதிபடி 5 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். இதுவரை 200க்கு அதிகமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறி வரும் முதல்வர், குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், ஒரு சமையல் எரிவாயுக்கு 100 ரூபாய் தரப்படும், டீசல் விலை குறைப்பு உள்ளிட்டவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனைத்தான் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனிடையே, தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்ற முதல்வர், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்நிலையில், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதைடுத்து, #1YearOfCMStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.

Related Stories

No stories found.