
திமுக மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஆஸ்டின் அதிமுகவில் இணைந்துவிட்டதாக இன்று காலை செய்திகள் வெளியானது. இதை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆஸ்டின், இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆஸ்டின் 1992ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார். 2001-ல் நாகர்கோயில் சட்டமன்ற தொகுதியில் எம்ஜிஆர் அதிமுக கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் தேமுதிகவுக்கு சென்ற அவருக்கு, மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவிலிருந்து விலகி, திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார்.
இதையடுத்து திமுகவில் அவருக்கு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக போட்டியிடும் வாய்ப்பும், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் 2021-ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்ததாக ஊடகங்களில் இன்று செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆஸ்டின், தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தான் வேறு கட்சியில் இணைந்துவிட்டதாக ஒரு தனியார் தொலைக்காட்சி தவறான தகவலை வெளியிட்டு வருவதாகவும், தன்னை பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்