
சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் வெள்ளிப்பட்டறை வியாபாரியை திமுக பிரமுகர் கன்னத்தில் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் வெள்ளி பட்டறை வைத்துள்ளார். இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக காரில் வந்த திமுக பிரமுகர் ராஜா, கண்ணனின் இருசக்கர வாகனத்தை இடிப்பது போல் வந்துள்ளார். அத்துடன், வண்டியை ஓரமாக நிறுத்த மாட்டியா என்று கண்ணனைத் திட்டியுள்ளார்.
இதைக் கவனித்த கண்ணன், தனது தலையில் அடித்துக்கொண்டே மனவேதனை அடைந்துள்ளார். உடனே காரில் இருந்து இறங்கி வந்த திமுக பிரமுகர் ராஜா, கண்ணனை கன்னத்தில் பளார், பளார் என அறைந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.