முன்னாள் அமைச்சர் உபயதுல்லா காலமானார்

எஸ்.என்.எம்.உபயதுல்லா
எஸ்.என்.எம்.உபயதுல்லா

திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பணியாற்றியவரும், 4 முறை தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவருமான எஸ்.என்.எம்.உபயதுல்லா இன்று காலமானார்.

இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் பிறந்து தஞ்சாவூரில் வாழ்ந்து வந்தவர் எஸ்.என்.எம்.உபயதுல்லா. இவர் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் 4 முறை வென்று சாதனை படைத்துள்ளார். திமுக அமைச்சரவையில் வணிக அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். திமுகவில் மாநில வர்த்தக அணித் தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளை அவர் வகித்து வந்தார்.

அஞ்சலி
அஞ்சலி

தஞ்சையில் வசித்து வரும் இவர் தனது 82வது வயதில், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இறந்தார். மறைந்த எஸ்.என்.எம்.உபயதுல்லாவுக்கு திமுக பிரமுகர்கள், தலைவர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in