திமுக மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல்: தேதிகளை அறிவித்த அண்ணா அறிவாலயம்!

திமுக மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல்: தேதிகளை அறிவித்த அண்ணா அறிவாலயம்!

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி முதல் தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-வது தேர்தல் புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட அவைத் தலைவர், மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர், மாவட்டப் பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து பொறுப்பு ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வரும் 22-ம் தேதி முதல் தலைமைக் கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். வேட்பு மனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, கோவை, தருமபுரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் திமுக மாவட்டச் செயலாளர்களின் சட்டமன்றத் தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே திமுகவின் கழக அமைப்பு ரீதியிலான அனைத்து இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய மாவட்டச் செயலாளர்களைக் கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி தருமபுரி உள்ளிட்ட சில இடங்களில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in