திமுக கவுன்சிலர் திடீர் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசு
சென்னை மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசுதிமுக கவுன்சிலர் திடீர் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை மாநகராட்சி 122 வது வார்டு உறுப்பினர் ஷீபா வாசு உடல் நலக்குறைவுக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 65. அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் 122 வது வார்டு திமுக கவுன்சிலர் ஷீபா வாசு உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரும், 122 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஷீபா வாசு மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in