திமுக மேயருக்கு திகில் கொடுத்த திமுக துணை மேயர்!

திமுக மேயருக்கு திகில் கொடுத்த திமுக துணை மேயர்!

வேலூர் மாநகராட்சி மேயராக அமர்த்தப்பட்டிருக்கும் சுஜாதா அமைச்சர் துரைமுருகனின் வெயிட்டான சிபாரிசில் வந்தவர். அதனால் ஆரம்பத்திலிருந்தே கெத்தாகவே இருக்கிறார் சுஜாதா. இந்த நிலையில், சொந்தக்கட்சிக்காரர்களை அனுசரித்துப் போகவில்லை என சுஜாதா மீது திமுகவினர் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால் அமைச்சர் துரைமுருகனோ, “வேலூர் மேயர் சுஜாதா துணிச்சலுடன் செயல்படுகிறார்” என பாராட்டுப் பத்திரம் வாசித்தார். இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருப்பதாக திமுகவினர் கொதித்தனர். இதனிடையே, அடிபம்பு, வாகனங்களுடன் சேர்த்து கான்கிரீட் சாலை அமைத்த விவகாரம் சுஜாதாவின் இமேஜை டேமேஜ் ஆக்கியது. இந்த நிலையில், கடந்த 30-ம் தேதி நடந்த மாமன்றக் கூட்டத்தில், வார்டுகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக மேயர் சுஜாதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள் திமுக கவுன்சிலர்கள். “மேயர் சுஜாதா மாநகராட்சிக்கு ஓனர் போலச் செயல்படுகிறார்” என திமுக துணை மேயர் சுனில்குமாரே சுஜாதாவுக்கு எதிராக அதிரடி கிளப்பினார். இதற்கெல்லாம் அமைச்சர் துரைமுருகன் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறது வேலூர் திமுக வட்டாரம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in