திமுக வட்ட செயலாளரால் உயிருக்கு ஆபத்து; தமிழக முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும்: கதறும் விசிக பெண் கவுன்சிலர்

சாந்தி
சாந்தி

திமுக வட்டச்செயலாளரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் கவுன்சிலர் சாந்தி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி என்கிற யாழினி. இவர் அசோக் நகர் 135 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். அவர் அசோக் நகர் பகுதிக்கு உட்பட்ட பி.டி.சி குடியிருப்பில் மழை நீர் அகற்றும் பணி மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரியுடன் இணைந்து அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அந்த பகுதிக்கு வந்த திமுக வட்ட செயலாளர் செல்வகுமார், அவரது உறவினரான திமுக நிர்வாகி மணி என்கிற சுப்பிரமணி இருவரும் சேர்ந்து சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் சாந்தி மற்றும் அவருடன் வந்திருந்த உதவியாளர்களை இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் பெண் கவுன்சிலரான சாந்தியை, மணியின் உறவினர்கள் செருப்பால் அடிக்க முயற்சி செய்ததனர். இது தொடர்பான வீடியோ மூக அலுவலகத்தில் வைரலானது. இது தொடர்பாக பெண் கவுன்சிலர் சாந்தி, சென்னை கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து சாந்தி கூறுகையில்," நான் கவுன்சிலராக பொறுப்பேற்றது முதலே மணி வீண் தகராறில் ஈடுபடுகிறார். குறிப்பாக அவரது மகளுக்கு அந்த வார்டு கவுன்சிலர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த நேரத்தில் விசிகவிற்கு வார்டு ஒதுக்கப்பட்டது. தேர்தலில் நான் வெற்றி பெற்று பணியாற்றி வருகிறேன்.இந்த நிலையில், அவரது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கவுன்சிலர் அலுவலக சாவியை ஒப்படைத்து விட்டு மயிலாப்பூரிலேயே இருக்க வேண்டும் என்று மணி கூறுகிறார். கூட்டணி கட்சி என்ற முறையில் அந்த பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் இணக்கமாக பணியாற்றி வருகிறேன். ஆனால், மணி மற்றும் செல்வகுமார் மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அவரின் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in