காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் அமைந்துள்ள சனீஸ்வரர் சன்னதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமையான நேற்று முதல்வர் மகள் செந்தாமரை வருகை தந்தார். தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் சனீஸ்வரரிடம் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
பரிகார ஸ்தலமான இக்கோயிலில் சனிக்கிழமை அன்று வழிபாடு மேற்கொள்ள திரளான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவர்களில் ஒருவராக செந்தாமரையும் வந்திருந்தார். முன்னதாக காரைக்கால் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், செந்தாமரைக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
திராவிட இயக்க பின்புலத்தில் திமுக மேற்கொள்ளும் பகுத்தறிவு மற்றும் கடவுள் எதிர்ப்பு பிரச்சாரங்கள் காரணமாக, பாஜக உள்ளிட்ட இந்துத்துவ ஆதரவு கட்சிகளின் சாடலுக்கு திமுகவினர் ஆளாகி வருகிறார்கள். அதிலும் ஒருபுறம் கடவுள் மறுப்பு கருத்துக்களை மேடையில் பேசியபடி, தனிப்பட்ட வகையில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக திமுகவினர் இருப்பதாகவும் பாஜகவினர் தாக்குதல் தொடுக்கின்றனர்.
முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் தங்களது இறை நம்பிக்கை மற்றும் வழிபாட்டு நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைமையின் கொள்கைகளையும், அவர்களது குடும்பத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் தொடர்புபடுத்தி சர்ச்சையை கிளப்புவோர் அதிகம். அந்த வகையில் திருநள்ளார் கோயிலில் செந்தாமரை மேற்கொண்ட சிறப்பு தரிசனத்தையும், சமூக ஊடகங்களில் திமுக எதிர்ப்பாளர்கள் வழக்கம்போல சர்ச்சையாக்கி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!
'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!
எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!
‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!
நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!